Enable Javscript for better performance
வெறி நாய் கடித்து 12 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் வெறி நாய் கடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.  
    பொள்ளாச்சி, வெங்கடேசா காலனியில் சாலையில் நடந்து சென்றவர்களையும், நின்று கொண்டிருந்தவர்களையும் புதன்கிழமை இரவு வெறிநாய் துரத்திக் கடித்தது. இதில், வி.கே.ஆர். வீதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (35), மாரிமுத்து (36), சீனிவாசன் (24), ஜெயபால் (65), ஹர்ஷித் (21), தமிழ்மணி (54), மதன்குமார் (19), கரோன் (23) உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai