Enable Javscript for better performance
வேன் மோதி சிறுவர்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் வேன் மோதியதில் சிறுவர்கள் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
    வெள்ளக்கிணறு, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனவேல். பழைய பேப்பர், அட்டைகள், பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன்கள் அழகர் (8), அன்பு (7). பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் தனவேலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது தனவேல், சரவணம்பட்டி - துடியலூர் சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த அட்டைகளைச் சேகரித்து கொண்டிருந்துள்ளார்.  சிறுவர்கள் இருவரும் வாகனத்தில் அருகில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது துடியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஓட்டுநர் எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக வேனை சாலை ஓரமாக ஒதுக்கியுள்ளார்.  அப்போது வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் மீது மோதியுள்ளது. இதில், அழகர், அன்பு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, காட்டூர் போக்குவரத்துக் காவல் துறையினர் வேன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai