Enable Javscript for better performance
ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டம்

    By DIN  |   Published on : 27th April 2017 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே கவுண்டர்மில் பிரிவில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தங்கள் கோரிக்கைகளை கல்லூரி நிர்வாகம் நிறைவேற்றவில்லை எனக் கூறி, உள்ளிருப்புப் போராட்டத்தில் மீண்டும் புதன்கிழமை ஈடுபட்டனர்.
     இக்கல்லூரியில் ஆய்வக வசதிகள் தரமானதாக இல்லை, உதவிப் பேராசிரியர்கள் தங்களை மதிப்புக்குறைவாக நடத்துகின்றனர் எனக் கூறி, மாணவ, மாணவியர் உள்ளிருப்புப் போராட்டத்தில் கடந்த வாரம் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி நிர்வாகத்தினரும், துடியலூர் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தை கைவிட வைத்தனர்.
     இந்நிலையில், இதுநாள் வரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் புதன்கிழமை இரவு 8 மணி அளவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் துடியலூர் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நள்ளிரவிலும்
    தொடர்ந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai