Enable Javscript for better performance
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 28th April 2017 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் இந்த ஆண்டு தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
     தமிழக ஆசிரியர் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் செ.ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மா.ராஜசேகரன் வரவேற்றார். மாநில துணைச் செயலர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார்.
     இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    கடந்த ஆண்டு நடைபெற்ற இடமாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எனவே, இந்த ஆண்டு நடைபெற உள்ள கலந்தாய்வில் ஒன்றியங்களில் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களைப் பதவி உயர்வு அளித்து பணியமர்த்த வேண்டும்.
     அதேபோல, வேறு ஒன்றியங்களுக்கு நிரவல் மாறுதல் செய்யப்பட்ட பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் முன்னர் பணியாற்றிய ஒன்றியத்தில் காலிப் பணியிடம் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மொழிச் சிறுபான்மை ஆசிரியர்களுக்கு அவர்களின் மொழிப் பாடத்தில் மட்டும் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
     கோவை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai