Enable Javscript for better performance
காரமடையில் ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் தற்போது அந்தந்த  ஊராட்சி அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ரூ. 8,000 வரை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்கள் மற்ற அரசுத் துறை அலுவலகங்களில் இருப்பது போல இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி அரசுக் கருவூலம் மூலமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அதன்படி, கோவை மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் நெற்றியில் நாமம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாஜு தலைமை வகித்து, கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
    காரமடை ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காரமடை, சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, சுல்தான்பேட்டை உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 180 பேர் கலந்துகொண்டனர்.
    இந்த ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai