Enable Javscript for better performance
கோவையில் நாளை வழக்கொழிந்த இசைக் கருவிகளை மீட்பதற்காக மகுடம் வல்லிசை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் நாளை வழக்கொழிந்த இசைக் கருவிகளை மீட்பதற்காக மகுடம் வல்லிசை நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 28th April 2017 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழர்களின் நடைமுறை வாழ்க்கையில் இருந்து வழக்கொழிந்த இசைக் கருவிகளை மீட்கும் முயற்சியாக கோவையில், மகுடம் எனும் பெயரில் சனிக்கிழமை (ஏப்ரல் 29) வல்லிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    பண்டைய தமிழகத்தில் தோல்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என்ற வகைப்படுத்தலின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால், நாளடைவில் அவற்றில் பல இசைக் கருவிகள் வழக்கொழிந்து போயின.
    இந்நிலையில், அதுபோன்று தற்போது வழக்கில் இல்லாத இசைக் கருவிகளையும், அழியும் நிலையில் உள்ள இசைக் கருவிகளையும், அவற்றை இசைக்கத் தெரிந்த ஓரிரு நபர்களையும் கொண்டு, இசையையும், இசைக் கலைஞர்களையும் மீட்டெடுக்க மகுடம் எனும் பெயரில் வல்லிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல் 29) மாலை 5.30 மணியளவில் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    சென்னை மகுடம் குழுவினர், அறிவுச்சோலை அறக்கட்டளை, கல்லூரியின் தமிழ்த் துறை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புழக்கத்தில் இருந்த, இருக்கின்ற 50-க்கும் மேற்பட்ட தொன்ம இசைக் கருவிகளை 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இசைக்க உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai