Enable Javscript for better performance
சாலை மறியல்: அரசு மருத்துவர்கள் 90 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் 90 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
     தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புச் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
     இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமையில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மருத்துவர்கள் பணிகளைப் புறக்கணித்து தர்னா, பேரணி, மனிதச் சங்கிலி உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு, திருச்சி சாலையில், கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமையில் மருத்துவர்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண் மருத்துவர்கள் உள்பட்ட 90 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai