Enable Javscript for better performance
திமுக முன்னாள் கவுன்சிலருக்கு எதிராகப் பொது மக்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    திமுக முன்னாள் கவுன்சிலருக்கு எதிராகப் பொது மக்கள் புகார்

    By DIN  |   Published on : 28th April 2017 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக திமுக முன்னாள் கவுன்சிலருக்கு எதிராக அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர்.
    இதுகுறித்து, கோவை மாநகராட்சி, ரத்தினபுரி, 49-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனிடம் அளித்துள்ள புகார் மனு விவரம்:
    கோவை மாநகராட்சி, 49-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர்களான லோகு, அவரது மனைவி மீனா லோகு ஆகியோர் தயிர் இட்டேரி புதுப்பாலம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கடைகளைக் கட்டி வாடகை வசூலித்து வருகின்றனர்.
    மேலும், அவர்கள் வசிக்கும் ராமதாஸ் வீதியில் உள்ள சொந்த வீட்டில் வீட்டுப் பயன்பாட்டுக்காகப் போடப்பட்ட ஆழ்துளைக் கிண்றில் இருந்து நீரை உறிஞ்சி வணிக வளாகங்களுக்கும், உணவகங்களுக்கும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
    இதனால், அவர்களது வீட்டின் அருகே வசிப்பவர்களின் வீடு மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே லோகு, அவரது மனைவி மீனா லோகு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai