Enable Javscript for better performance
பாஜகவினர் போராட்டம்: ஏ.டி.எஸ்.பி. விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடையை மூட வலியுறுத்தி தொடர்ந்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருவதையடுத்து மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி. வியாழக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டார்.
    வால்பாறையை அடுத்த சோலையாறு அணைப் பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையை மூட வலியுறுத்தி பாஜகவினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சோலையாறு அணைப் பகுதிக்கு சென்ற மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி. சந்திரமோகன் அப்பகுதியினரிடம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, மதுக்கடையை மூடுவது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக பாஜக நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai