Enable Javscript for better performance
பெண் கொலை: ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணைக் கொலை செய்த வழக்கில் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை, மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஊஞ்சவேலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவரது மனைவி சத்தியபாமா.
    பிரகாஷ், அதே பகுதியில் உள்ள தென்னை நார்த் தொழிற்சாலையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அப்போது, பிரகாஷுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரகுமார் என்பவரது மனைவி ஜெகதாம்பாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2013 ஆகஸ்ட் மாதம், பிரகாஷின் மனைவி சத்தியபாமா அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, பிரகாஷை பார்க்க வந்த ஜெகதாம்பாள் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி பிரகாஷை கட்டாயப்படுத்தியுள்ளார்.
    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், ஜெகதாம்பாளைக் கழுத்தை நெரித்தும், அறுத்தும் கொலை செய்துள்ளார். இதுகுறித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த பிரகாஷ், கொலை மறைக்க உதவியை அவரது மனைவி சத்தியபாமா, முசிறியைச் சேர்ந்த நண்பர் ரூபன்ராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.
    இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மணிமொழி குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
    மேலும், குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷின் மனைவி சத்தியபாமா, நண்பர் ரூபன்ராஜ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai