Enable Javscript for better performance
ரூ. 50 லட்சம் செல்லாத நோட்டுகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 50 லட்சம் செல்லாத நோட்டுகளை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். சாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர் கையில் பையுடன் நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து, அவர்களது பைகளை சோதனை செய்ததில் அதில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான செல்லாத ரூ. 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இளங்கோவன் (62), மும்பையைச் சேர்ந்த திவாகர் (48) என்பது தெரியவந்தது. மேலும், 30 சதவீத கமிஷன் அடிப்படையில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சித்ததும் தெரியவந்தது.
    இதையடுத்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த சாய்பாபா காலனி போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai