Enable Javscript for better performance
ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவதுஅவதார ஆண்டு நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது அவதார ஆண்டு நிறைவு விழா

    By DIN  |   Published on : 28th April 2017 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது அவதார ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 29) தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
     இந்நிகழ்ச்சி, சனிக்கிழமை காலை 8 மணியளவில் ராமானுஜர் சன்னிதி புறப்பாட்டுடன் தொடங்குகிறது. பின்னர், உற்சவர், ராமானுஜர் திருமஞ்சனம், கும்ப ஸ்தாபனம், புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம் ஆகியவை நடைபெறும். மாலை 5 மணி முதல் வசந்த உற்சவம் நடைபெறும். இரவு 7 மணி அளவில் சென்னை டாக்டர் சுபாஷினி பார்த்தசாரதியின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
     இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ராமானுஜர் சன்னிதி புறப்பாட்டுடன் தொடங்குகிறது. பின்னர், உற்சவர், ராமானுஜர் திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இரவு 7 மணியளவில் மும்பை ஐஸ்வர்யா வெங்கடேஷின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
     இறுதி நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகின்றன. மாலை 5 மணிக்கு லட்சுமி நரசிம்ம ஹோமம், வேதபிரபந்த சாற்று முறை, சரணாகதி கத்யம் சேவித்தல், சேஷ வாகன சதுர்வீதி புறப்பாடு, எதிர்சேவை பஜனை, கோலாட்டம், திருவந்திக்காப்பு ஆகியவையும், இரவு 7 மணிக்கு கோ மடம் மாதவாச்சாரியார் சுவாமிகளின் ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.
     இதைத் தவிர தினசரி காலை 9.30 மணி முதல் பிரபந்த சேவா காலம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வழிகாட்டுதலின்பேரில் மேலாளர் ஜி.வெங்கடேஷ் செய்து வருகிறார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai