Enable Javscript for better performance
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

    By DIN  |   Published on : 29th April 2017 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள், சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுக்கும் பணி மே 5-ஆம் தேதி தொடங்குகிறது.
      ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள், சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுக்கும் பணி மே 5-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய நான்கு வனச் சரகங்களில், 26 குழுக்கள் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட உள்ளன.
     மூன்று நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்புப் பணிகளின் தகவல்கள் சென்னை, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
     கணக்கெடுப்பு குறித்து வனக் காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு ஆனைமலை வனத் துறை அலுவலகத்தில் பொள்ளாச்சி
    வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. உயிரியலாளர் ஆறுமுகம் பயிற்சியளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai