Enable Javscript for better performance
கருப்புப் பட்டை அணிந்து அரசு மருத்துவர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து 8-ஆவது நாளாக மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
     தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புச் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
     இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமையில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மருத்துவர்கள் பணிகளைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    தொடர்ந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து கருப்புப் பட்டை அணிந்து மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai