Enable Javscript for better performance
கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 29th April 2017 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை கோரி சமூக ஆர்வலர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சூலூர் அருகே உள்ள அரசூர் கிராம நிர்வாக அலுவலராகப் பொறுப்பு வகித்து வருபவர்  கண்ணன். இவர், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி பணியில் இருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் அந்த ஊரின் குறிப்பிட்ட நிலம் சம்பந்தமாக சில ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாராம்.
    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சமூக ஆர்வலர் ரமேஷ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
    சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
    அதன்பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்நிலையில், சிகிச்சை முடிந்து ரமேஷ் மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவர் தனக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும். கிராம நிர்வாக அலுவலரைக் கைது செய்யவேண்டும். சட்ட விதிமுறையின்படி, கிராம நிர்வாக அலுவலர் அந்த கிராமத்திலேயே தங்கயிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    அவருடன், எலச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன், சூலூரைச் சேர்ந்த நடராஜன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அவர்களிடம் வட்டாட்சியர் பழனி மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai