Enable Javscript for better performance
டிராக்டர் மீது கார் மோதல்: இளைஞர் சாவு; 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
     காரைக்குடி, வெற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (எ)சொக்கலிங்கம் (27). ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். இவர், தனது காரில் தன்னுடைய நண்பர்களான வள்ளியப்பன் (25), பிரசாத் (20), ரஞ்சித் (21) ஆகியோருடன் வெற்றியூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவைக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தார்.
     அப்போது, பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது இந்த கார் மோதியது. இவ்விபத்தில், காரை ஓட்டிச் சென்ற சொக்கலிங்கம் பலத்த அடிபட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காரில் சென்ற மற்ற மூவரும் காயமடைந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
     இது குறித்து கோமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai