Enable Javscript for better performance
தண்ணீர் லாரி மோதி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மோதியதில் 17 வயது மாணவர் உயிரிழந்தார்.
    பொள்ளாச்சியை அடுத்த சக்திசோயாஸ் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் அருண் (17). இவர், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். அருண், இருசக்கர வாகனத்தில் அம்பராம்பாளையம் சென்றுவிட்டு சக்திசோயாஸ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு திரும்பி வந்துள்ளார்.
    அப்போது, தண்ணீர் லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அருண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இந்நிலையில், அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai