Enable Javscript for better performance
நாளை இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்: 3.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    நாளை இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்: 3.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

    By DIN  |   Published on : 29th April 2017 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறவுள்ள இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாமில் 3.33 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
     நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் இரண்டாம் கட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறுகிறது.
     கோவை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நகர்ப்புறத்தில் 399 மையங்கள், கிராமப்புறங்களில் 1,182 மையங்கள் என மாவட்டம் முழுவதும் 1,581 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
     இப்பணியில் சுகாதாரத் துறை, அங்கன்வாடிப் பணியாளர்களுடன் பிற துறைப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என மொத்தம் 6,536 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பணியில் பயன்படுத்தப்படவுள்ளன.
     பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க 34 மையங்கள் மற்றும் 24 நடமாடும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
     இந்த முகாம் மூலமாக கோவை மாவட்டத்தில் 3.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     மேலும், வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வந்து வசிப்பவர்களின் 5 வயதுக்கு உள்பட்ட 1,629 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்த முகாம் மூலமாக மீண்டும் சொட்டு மருந்து அளிக்கலாம்.
     அரசால் வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது. மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ செட்டு மருந்து வழங்குவதன் மூலமாக குழந்தைகளுக்கு எவ்விதப் பின்விளைவுகளும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai