Enable Javscript for better performance
பாலமலை அரங்கநாதர் கோயில்: மே 4-இல் சித்திரைத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கோவை மாவட்டத்தின் புராதன திருத்தலமான பாலமலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி, 10 நாள்கள் உற்வசம் நடைபெறும். இங்குள்ள ஆதிவாசிகள் நடத்தும் இந்த விழாவில் தொடர்ந்து 10 நாள்கள் அன்னவாகனம், அனுமந்தவாகனம், கருடவாகனம் ஆகியவற்றில் மாடவீதிகளில் வலம்வந்து பெருமாள் சேவை சாதிப்பார்.
    விழாவில், மே 8-ஆம் தேதி செங்கோதையம்மன் அழைப்பும், 9-ஆம் தேதி திருகல்யாண உற்சவமும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் மே 10-ஆம் தேதி நடைபெறும்.
    அன்றைய தினம் மாலை 4 மணியளவில் தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மே 11-இல் பரிவேட்டையும், திருமங்கையாழ்வார் வைபவமும், மே 12-இல் தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
    விழாவையொட்டி, தினமும் கலைநிகழ்ச்சிகளும், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களின் பஜனைகள், அன்னதானம் ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai