Enable Javscript for better performance
பிளாக்தண்டருக்கு 2 விருதுகள்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக்தண்டர் கேளிக்கைப் பூங்காவுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த கேளிக்கை பூங்கா விருதும், சிறந்த பிராண்டுக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளன.
     கடந்த மார்ச் 21-இல் மும்பையில் நடைபெற்ற விழாவில், சிறந்த பிராண்டு-2017 என்ற விருதினை திரைப்பட நடிகை ஜெய்ஸ்ரீயும், மார்ச் 24-இல் சென்னையில் நடைபெற்ற விழாவில் மிகச் சிறந்த நீர் விளையாட்டுப் பூங்காவுக்கான விருதினை நடிகை பூர்ணிமா பாக்யராஜும் வழங்க, இந்த விருதுகளை பிளாக்தண்டர் பூங்கா செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கலராஜ் பெற்றுக் கொண்டார்.
     இது குறித்து அவர் கூறியதாவது:
     சிறந்த தரமான சேவைக்காகவும், புதுமையான விளையாட்டுக்களை அதிக அளவில் கொண்டதற்காகவும், சிறந்த ஊடக பயன்பாட்டிற்காகவும் அகில இந்திய கேளிக்கை பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் பிளாக்தண்டருக்கு கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை 20-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai