Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் நடமாடும் நீதிமன்றம்: 43 பேருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் நடமாடும் நீதிமன்றம்: 43 பேருக்கு அபராதம்

    By DIN  |   Published on : 29th April 2017 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் நடமாடும் நீதிமன்றம் மூலமாக 43 பேருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
     பொள்ளாச்சி - உடுமலை சாலையில் மின்நகர் அருகே நடமாடும் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை செயல்பட்டது. சாலை விதிகளை மீறியவர்கள், தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கியவர்கள் என 43 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். நடமாடும் நீதிமன்ற நீதிபதி பிரவீணா ஒவ்வொருவருக்கும் ரூ. 100 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai