மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
By DIN | Published on : 29th April 2017 05:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பொகளூரில் மதுக்கடை அமைக்கும் பணியை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், தாளத்துறைப் பிரிவில் செயல்பட்டு வந்த மதுக் கடை, அங்கிருந்து அகற்றப்பட்டு, குப்பேபாளையம் ஊராட்சி, செங்காளிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அந்த மதுக் கடையை அங்கிருந்து அகற்றி, பொகளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் பின்புறம் அமைப்பதற்கான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மதுக் கடை அமைக்கும்
பணியைத் தடுத்து நிறுத்தினர். இது குறித்து வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் அதிகாரிகளிடமும் மனு அளிக்க இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.