Enable Javscript for better performance
மூதாட்டியிடம் நகைப் பறிப்பு: இளம்பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் நகையைத் திருடிய பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
     கோவை, வடவள்ளி வெற்றி விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பேபி (62). இவர் வடகோவையில் இருந்து காந்திபார்க் செல்லும் பேருந்தில் வியாழக்கிழமை பயணம் செய்துள்ளார். அவரது பையில் 3 பவுன் நகை இருந்துள்ளது.
     பேருந்து பயணத்தின்போது பேபி தனது பையைச் சோதனையிட்டதில் அதில் வைத்திருந்த நகையைக் காணவில்லை. இதையடுத்து, பேருந்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
     அப்போது, பேருந்தில் மூதாட்டி அருகே பயணம் செய்த ஒசூரைச் சேர்ந்த சங்கீதா (32) நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சங்கீதாவை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai