Enable Javscript for better performance
மூலப் பொருள்கள் விலை உயர்வைக் கண்டித்து மே 4-ஆம் தேதி பவுண்டரிகள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    மூலப் பொருள்கள் விலை உயர்வைக் கண்டித்து மே 4-ஆம் தேதி பவுண்டரிகள் வேலைநிறுத்தம்

    By DIN  |   Published on : 29th April 2017 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூலப் பொருள்கள் விலை உயர்வைக் கண்டித்து கோவை மாவட்ட சிறு, குறு பவுண்டரி அதிபர்கள் சங்கம் (காஸ்மாபேன்) சார்பில், மே 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) பவுண்டரிகள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
     இதுகுறித்து, சங்கத் தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது:
    இயந்திரத் தொழில்களுக்குத் தேவையான வார்ப்படங்கள் தயாரிக்கும் தொழிலில் கோவை முன்னணியில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 400 சிறு, குறு நிறுவனங்களும், 50 நடுத்தர, பெரிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
     இந்தத் தொழிலுக்கு பெரோ சிலிக்கான், சிலிக்கா மணல், பெரோ சிலிக்கான் மெக்னீஷியம் போன்ற மூலப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூலப் பொருள்களின் விலை அடிக்கடி மாறி வருவதால் தொழில் நிலைத்தன்மையின்றி உள்ளது.
     இதனால், தொழில் முனைவோர், பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மூலப் பொருள்களின் விலையை 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
     இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மே 4-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட சிறு, குறு பவுண்டரி அதிபர்கள் முடிவு செய்துள்ளோம். எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு நடுத்தர, பெரிய நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
     பவுண்டரி தொழிலின் நன்மை கருதி மத்திய, மாநில அரசுகள் மூலப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai