Enable Javscript for better performance
4 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    4 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 29th April 2017 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
     இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி:
     கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
     தனியார் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனுதாரர் ஏதாவது பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்புத் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆசிரியர் பட்டப் படிப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். இதில், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்று தங்களது கல்வி நிறுவனத்துக்குத் தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
     இந்த வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் ரத்து செய்யப்படமாட்டாது.
     இந்த வேலைவாய்ப்பு முகாம் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai