Enable Javscript for better performance
411 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 19 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    411 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 19 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 29th April 2017 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் இரண்டாம் கட்டமாக வடக்கு மற்றும் மேற்கு வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகத்துக்கு உள்பட்ட தனியார் பள்ளிகளின் 411 வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இதில், 19 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
     கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் கோவை மத்திய, தெற்கு மற்றும் சூலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட 441 பள்ளி வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
     இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் தினசரி குறிப்புப் புத்தகம், பேருந்தின் தளம், வேகக் கட்டுப்பாட்டு கருவி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, அவசரக்கால வழி, இருக்கை வசதிகள், புகைக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ், ஆவணங்கள், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
     முதல் கட்ட ஆய்வில் 12 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவை வடக்கு மற்றும் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட 411 தனியார் பள்ளி வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
     இதில், 19 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பழுது உள்ளதாகக் கூறி அவற்றின் உரிமையாளர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai