Enable Javscript for better performance
ஓடந்துறை ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    ஊமப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு காரமடை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நந்தினி வரவேற்றார்.  
    இதில், மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான சின்னசாமி பங்கேற்று வாக்காளர் பட்டியல் குறித்துப் பேசினார். இக்கூட்டத்தில், ஓடந்துறை ஊராட்சிப் பகுதிக்கு உள்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல், நீக்கம் குறித்த பணிகள் தொடர்பாக அனைவரும் அறியும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு  வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது.
    இந்தப் பட்டியலை பார்வையிட்ட ஊராட்சி மக்கள் அதில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
    இச்சிறப்பு முகாமில் ஊராட்சிக்கு உள்பட்ட வினோபாஜி நகர், கல்லாறு புதூர், ஊமப்பாளையம், ஓடந்துறை, வேடர் காலனி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai