Enable Javscript for better performance
கோவை வித்யாஷ்ரம் பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    கோவை வித்யாஷ்ரம் பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டிகள்

    By DIN  |   Published on : 22nd October 2017 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பாளையம், கோவை வித்யாஷ்ரம் பள்ளியில் கோமுகேஷ்வரா யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான யோகா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
    இந்தப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  இதில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நித்திஷ், நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த நவ்யா,  மூத்தோர் பிரிவில் கோவையைச் சேர்ந்த ஆதித்யா, கரூரைச் சேர்ந்த ரித்திகா, மிக மூத்தோர் பிரிவில் கோவையைச் சேர்ந்த சாய் சச்சின், அஷ்வதிகா, ஆகியோர் வாகையர் பட்டம் வென்றனர். சேவூர், கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
    யோகா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோமுகேஷ்வரா யோக மைய நிறுவனர் வி.ஸ்ரீகுமார், பள்ளித் தாளாளர் தனபால், முதல்வர் முருகையா, பாரதியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் வள்ளிமுருகன், பள்ளித் தலைவர் பழனிசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியர்கள் கௌதம், செல்வராஜ், வேணுகோபால், இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai