Enable Javscript for better performance
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பெருந்திரள் டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பெருந்திரள் டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்

    By DIN  |   Published on : 22nd October 2017 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் சனிக்கிழமை நடைபெற்ற பெருந்திரள் டெங்கு விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.
    மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஈச்சனாரியில் உள்ள மென்பொருள் நிறுவனப் பணியாளர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பெ.கணேஷ்ராம், பேரூராட்சி செயல்அலுவலர் கோ.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் பணிகளைத் தொடக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் பரமசிவம் வரவேற்றார்.
    தொடர்ந்து, இப்பேரூராட்சியில் பணிபுரியும் 50 பணியாளர்கள் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த 450 பேர் என 500 பேர், 18 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் வீதம் இப்பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்களில் உள்ள 9,000 வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
    தேவைப்பட்ட இடங்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியிலும் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதற்கிடையே மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் பெ.நா.பாளையம் காவல் நிலைய வளாகம், குடியிருப்பு வளாகம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
    அதிக அளவில் வளர்ந்திருந்த புதர்களையும், தேவையில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
    இந்த ஆய்வின்போது பெ.நா.பாளையம் சரக டி.எஸ்.பி.சீனிவாசலு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தகுமாரி,  சுகாதார மேற்பார்வையாளர் ராம்ராஜ் முன்னாள் கவுன்சிலர்கள் ரகுநாதன், சிவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai