Enable Javscript for better performance
பேருந்தில் ரத்த வாந்தி எடுத்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை சாய்பாபா காலனி அருகே ஓடும் பேருந்தில் ரத்த வாந்தி எடுத்த மருத்துவக் கல்லூரி ஒப்பந்த ஊழியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
     கோவை காந்திபுரத்தில் இருந்து ராக்கியாபாளையத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று சனிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது பயணி ஒருவர் திடீரென ரத்தவாந்தி எடுத்துள்ளார். சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சைக்காக பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
    இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (45) என்பதும், அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த மருந்தாளுநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai