Enable Javscript for better performance
பொள்ளாச்சி சிம்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மைக் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    கல்லூரி ஆலோசகர் சுப்பிரமணியன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக லேண்ட் மார்க் குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் வெங்கட்டரமணா பங்கேற்றுப் பேசினார்.  அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் 48-ஆவது இடம் பெற்ற மாணவி கே.கோகுலபிரியங்காவுக்கு பதக்கமும், சான்றதழும் வழங்கப்பட்டது. இதில், 90 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பேராசிரியர் தியாகு நன்றி கூறினார்.
    பட்டமளிப்பு விழாவில், என்ஜிஎம் கல்லூரி முதல்வர் பழனிசாமி, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை துணைத் தலைவர் முத்துவேலப்பன், என்ஜிஎம் கல்லூரி நிர்வாக மேலாளர் ரகுநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai