ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கஞ்சா விற்பனை:தம்பதி கைது

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக தம்பதியை பீளமேடு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:20 am IST

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக தம்பதியை பீளமேடு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது கொடிசியா அருகே, சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில்,  அவர்கள் கவுண்டம்பாளையம், சாந்தி நகரைச் சேர்ந்த சொக்கநாதன் (55). அவரது மனைவி சுகுணா (55) என்பதும், இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.