மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்துக்கு கூடுதல் அரசு குற்றத் துறை வழக்குரைஞர் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் (சிவில்) பதவிக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வழக்குரைஞர் வெ.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் செந்தில்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மேட்டுப்பாளையம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் சாந்தமூர்த்தி, துணைத் தலைவர் ஆனந்தகுமார், வழக்குரைஞர் செல்வகுமார், அபிபுர் ரஹ்மான், ரவிஆறுமுகம், சுப்பிரமணி, ராஜா, தினேஷ், திருமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.