வால்பாறை மண்டல பாஜக சார்பில் மத்திய அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கத் தெருமுனைப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை காந்தி சிலை பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் ஏ.எல்.ஜே. சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மண்டலப் பார்வையாளர் கே.எம்.தங்கவேல் முன்னிலை வகித்தார். மண்டலப் பொதுச் செயலாளர் கே.ஆர்.கார்த்திக் சாதனை விளக்க உரையாற்றினார்.
மாவட்டப் பொதுச் செயலாளர் எம்.ஆனந்த், துணைத் தலைவர் சி.துரை, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாபா ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மத்திய அரசின் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டத் திட்டங்கள், தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்துப் பிரசாரத்தில் விளக்கமளிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் செந்தில்முருகன் நன்றி கூறினார்.