கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை சார்பில் 3 நாள்கள் நடைபெறும் தொழில்முனைவோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
நானோ அறிவியல் துறை கருத்தரங்க வளாகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு, துறைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பரிமேலழகன் வரவேற்றார். துணைவேந்தர் குழு உறுப்பினர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.
இந்தக் கருத்தரங்கில் தொழில்முனைவோருக்கான கையேடு வெளியிடப்பட்டது. முகாமின் துணை ஒருங்கிணைப்பாளர் குருசரவணன் நன்றி கூறினார். இந்த முகாமில், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, உயிர் உரம் தயாரிப்பு, ஊறுகாய், ஜாம், பேக்கிங் பொருள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.