பாரதியார் பல்கலை.யில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி

ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளி நடத்தும் மேற்கு மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கின.
Published on
Updated on
1 min read

ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளி நடத்தும் மேற்கு மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கின.
53 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, கபடி, கோ கோ, கூடைப்பந்து, எறிபந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. வரும் 10 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் 3 நாள்களுக்கு மாணவர்களுக்கும், அடுத்த 2 நாள்களுக்கு மாணவிகளுக்கும் தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.