வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம்: நிர்வாகத்தினருக்கு தொழிற்சங்கத்தினர் கண்டனம்

வெளிமாநிலத் தோட்டத் தொழிலாளர்களுக்கு, எஸ்டேட் நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளித்து வருவதாக  அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

வெளிமாநிலத் தோட்டத் தொழிலாளர்களுக்கு, எஸ்டேட் நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளித்து வருவதாக  அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வால்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு, அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை வி.அமீது தலைமை வகித்தார். சௌந்திரபாண்டியன் (எல்பிஎப்), கருப்பையா (ஐஎன்டியூசி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  
எஸ்டேட்களில் பணியாற்றக்கூடிய வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி,  பல ஆண்டுகளாக பணியாற்றும் தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகளைப் பறிக்க 
நினைக்கும் நிர்வாகத்தினருக்கு கண்டனம் தெரிவிப்பது,  2002 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையாக ரூ.1,500 தொழிலாளர்களுக்கு பெற்றுத் தர தொழிற்சங்கத்தினர் ஒருங்கிணைந்து செயல்படுவது,  சுமார் 15 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்காமல் இருக்கும் ஹைபாரஸ்ட் எஸ்டேட் நிர்வாகத்தினருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட
 பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.