Enable Javscript for better performance
அன்னூரில் வருவாய்த் துறையினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  அன்னூர் வட்ட வருவாய்த் துறையினர் சிறு விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,  காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்,  வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதில் அன்னூர் வட்டத்தில் 23 வருவாய்த் துறை அதிகாரிகளில் 10 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai