Enable Javscript for better performance
அன்னூர் கூட்டுறவு வங்கி மேலாளர் வீட்டில் பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் கூட்டுறவு வங்கி மேலாளர் வீட்டில் பணம் திருட்டு

    By DIN  |   Published on : 09th February 2018 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூர் கூட்டுறவு வங்கி மேலாளர் வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் வியாழக்கிழைமை திருடிச் சென்றுள்ளனர்.
    அன்னூர் கூட்டுறவு வங்கி மேலாளராகப் பணியாற்றி வருபவர் லிங்கசாமி (50). இவரது மனைவி உஷாராணி (38). இவர்களது வீடு அ.மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளது. 
    இருவரும் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு, காலை 11 மணியளவில் பணிக்குச் சென்றுள்ளனர்.  இதையடுத்து, மாலை 4 மணியளவில் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 
    இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரொக்கம் ரூ. 52 ஆயிரம், வெள்ளி பொருள்கள், ஆவணங்கள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai