Enable Javscript for better performance
கே.எம்.சி.ஹெச்.-இல் முதல் முறையாக இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    கே.எம்.சி.ஹெச்.-இல் முதல் முறையாக இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

    By DIN  |   Published on : 09th February 2018 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் (கே.எம்.சி.ஹெச்.) சிறுநீரகம்,  கணையம் என்ற இரு உறுப்புகளை மாற்றும் அறுவை சிகிச்சை முதல் முறையாக நடைபெற்றுள்ளது.
    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    எங்களது மருத்துவமனைக்கு அண்மையில் வந்த சேலத்தைச் சேர்ந்த குமார் (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறவியில் இருந்தே டைப் -1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் முழு சிறுநீரகச் செயலிழப்பு, விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    இதற்காக அவர் அதிக அளவில் இன்சுலின் ஊசி மருந்து,  டயாலிஸிஸ் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து உறுப்பு மாற்று சிகிச்சை ஒன்றே இவரது பிரச்னைக்குத் தீர்வு என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 
    இதையடுத்து மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து குமாருக்கு சிறுநீரகம், கணையம் ஆகிய உறுப்புகள் கிடைத்தன.
    கே.எம்.சி.ஹெச்-இல் சிறுநீரகம், கணையம் மாற்று அறுவை சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மங்கள குமார்,  விவேகானந்தன் ஆகிய இருவரும் இந்த இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை  மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
    இதையடுத்து குமாரின் உடலில் போதிய அளவு இன்சுலின் சுரப்பதால் நீரிழிவு நோயிலிருந்து அவர் குணமாகிவிட்டார். நீரிழிவுக்கான  சிகிச்சையை அவர் மேற்கொள்ளத் தேவையில்லை. அத்துடன்நீரிழிவு நோயின் காரணமாக ஏற்படும் விழித்திரை நோய்,  நரம்பு மண்டலக் கோளாறு, ரத்தக் குழாய் பாதிப்பு, இதய பாதிப்பு ஆகிய சிக்கல்களிலிருந்தும் இவர் காப்பாற்றப்படுவார்.
     ஒரே நேரத்தில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேல்நாடுகளில் அதிகமாக செய்யப்படுகிறது. ஆனால், போதிய நிபுணத்துவமும், வசதிகளும் இல்லாத காரணத்தால் இந்தியாவில் இந்த சிகிச்சை அளிக்கப்படுவது அரிதாகவே உள்ளது. இருப்பினும் தற்போது சென்னைக்கு அடுத்தபடியாக கே.எம்.சி.ஹெச்-இல் செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுவினரை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி பாராட்டியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai