Enable Javscript for better performance
கொங்குநாட்டு கால்நடை திருவிழா இன்று துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டம்,  பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் கொங்குநாட்டு கால்நடைத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்குகிறது.
    கால்நடைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  கடந்த மூன்று ஆண்டுகளாக வாணவராயர் அறக்கட்டளை சார்பாக கால்நடைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் 650 கால்நடைகள் பங்கேற்றன. 60 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக வந்திருந்தனர். இந்த ஆண்டுக்கான கால்நடைத் திருவிழா  கோமாதா பூஜையுடன் வெள்ளிக்கிழமை  துவங்குகிறது. 
     கோமாதா பூஜைக்கு முன்பாக விழா கொடியேற்றமும் வேளாண் கண்காட்சியும் துவங்கவுள்ளது.  பிப்ரவரி 10-ஆம் தேதி சிறந்த காங்கேயம் காளை இனத்துக்கான போட்டியும்,  11-ஆம் தேதி சிறந்த ஜோடி காளை,  பிற நாட்டு இனங்கள்,  குதிரை,  சண்டை கிடா, எருமை,  சேவல்,  நாய்களுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளன.  அன்று மாலை பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai