Enable Javscript for better performance
சத்துணவு மையத்தை சேதப்படுத்திய யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு புதன்கிழமை இரவு வந்த யானைகள்,  அங்கிருந்த சத்துணவு மையத்தில் இருந்த பொருள்களை சேதப்படுத்தின.
    உணவு தேடி வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு இரவு நேரங்களில்  வரும் யானைகள் சத்துணவு மையம்,  ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருவது வழக்கமாகி விட்டன. இதன்காரணமாக ரேஷன் கடைகளுக்குள் உணவுப் பொருள்களை வைக்காமல் மாற்று இடங்களில் வைத்து வருகின்றனர். 
    இந்நிலையில்,  வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதிக்கு கடந்த புதன்கிழமை இரவு வந்த 5 யானைகள்,  அங்குள்ள அரசுப் பள்ளியின் சத்துணவு மையத்தின் கதவுகளை உடைத்து உள்ளிருந்த பொருள்களை வெளியே இழுத்து சேதப்படுத்தின.  
    தகலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானைகளை விரட்டியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai