Enable Javscript for better performance
சாடிவயல்,  டாப்சிலிப்  யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சாடிவயல்,  டாப்சிலிப்  யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை சாடிவயலில் உள்ள கும்கி யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 
    தமிழகத்தில் வனத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகள் மற்றும் கும்கி யானைகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  நிகழாண்டுக்கான யானைகள் சிறப்பு  நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.   கோவை சாடிவயலில் வனத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் பாரி (35),  சுஜய் (45) ஆகிய இரு கும்கிகள் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமை மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலர் சதீஷ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். 
    இதில், கும்கிகளுக்கு நாள்தோறும் சத்தான உணவுகள்,  பழங்கள் வழங்கப்பட உள்ளன.  இந்த முகாமானது வரும் மார்ச் 28-ஆம் தேதி வரையில் 48 நாள்கள் நடைபெறுகிறது.  
    டாப்சிலிப்  வளர்ப்பு யானைகளுக்கும் 
    புத்துணர்வு முகாம் 
    டாப்சிலிப்பில் உள்ள 23 வளர்ப்பு யானைகளுக்குகான  புத்துணர்வு முகாம் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ளது.
     டாப்சிலிப் கோழிகமுத்தி மற்றும் சின்னாறு யானைகள் வளர்ப்பு முகாமில் 23 யானைகள் உள்ளன.  இந்த யானைகள் கும்கி ஆபரேஷன் மற்றும் யானை சவாரிகளுக்கு பயன்படுத்தப்பட்டுவருவதுடன்,  வனப்பகுதி மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.  இந்நிலையில் இந்த  யானைகளுக்கு ஓய்வளித்து,  புத்துணர்வு ஏற்படுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை துவங்கி தொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.  இந்த புத்துணர்வு முகாமை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் துவக்கிவைக்கவுள்ளார்.  இந்த சிறப்பு புத்துணர்வு முகாம் காரணமாக 48 நாள்களுக்கு யானை சவாரி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai