Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் நுகர்வோர் அமைப்பு,  சிஏஜி மற்றும் பெட்காட் அமைப்பு சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் தலைவர் ஜெயராமன்,  சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காட்சித் தொகுப்பை காண்பித்தார்.  மேலும்,   மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளின் அவசியம் குறித்தும்,  நுகர்வோர் சட்டம் மற்றும் அதன் உரிமைகள் குறித்தும் எடுத்துரைத்தார். 
    இதைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்டத்தின் புதிய மசோதா 
    குறித்தும்,  சாலைப் பாதுகாப்பு பயன்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் குறும்படங்கள் திரையிடப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai