Enable Javscript for better performance
சூலூர் குளக்கரை உடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் குளக்கரையை உடைத்து கழிவு நீர் குழாய் அமைத்துள்ளதாக  விவசாயிகள் வியாழக்கிழமை  புகார் தெரிவித்துள்ளனர்.
    சூலூர் அருகே பெரிய மற்றும் சிறிய குளங்கள் உள்ளன. இவற்றின் மூலம் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்குளங்களில் மீன் வளர்த்து பல மீனவ குடும்பத்தினர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் சிறிய குளத்தை ஒட்டி சூலூரின் கிழக்குப் பகுதியில் மதியழகன் நகர், சூலூர் பேருந்து நிலையத்தின் பின்பகுதி ஆகியன உள்ளன. 
    இங்குள்ள சிறிய குளத்தில் இருந்து செங்கத்துரை மற்றும் அதன் அருகில் உள்ள சிறிய குட்டைகளுக்கு நீர் செல்கின்றது. 
    இந்நிலையில்,  சிறிய குளத்தின் ஒரு கரையினை உடைத்து அதன் அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் குழாய் பதித்து வீட்டின் கழிவு நீரை குளத்தினுள் விட்டுள்ளார்.  இதனால் மழைக்காலத்தில் குளம் நிரம்பும் நிலையில் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாகவும்,  இதனால் விவசாயமும் பாதிக்கப்படலாம் எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    இக்குளத்தைப் பாதுகாக்க பொதுப்பணித் துறையில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டிருந்தும் கரை உடைக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  எனவே,  உடனடியாக குளக் கரையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai