Enable Javscript for better performance
செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவர் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் செவிலியர் பயிற்சி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
     இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கோவை, சிங்காநல்லூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் டி.ரவீந்திரன் (47). மருத்துவரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, செவிலியர் படிப்பை முடித்த மாணவிகள் இந்த மருத்துவமனையில் தங்கி பயிற்சி மேற்கொள்வது வழக்கம். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது மாணவி செவிலியர் படிப்பை முடித்துவிட்டு ரவீந்திரனின் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருடன் சக மாணவிகள் சிலரும் தங்கி இருந்தனர். 
    இந்த நிலையில், கடந்த சில நாள்களாகவே ரவீந்திரன் அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அந்த மாணவிக்குத் திடீரென உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
    இதையடுத்து, ரவீந்திரன் ஊசி மூலமாக மாணவிக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளார். பின்னர் அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உக்கடத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தின் தொலைபேசி எண்ணில் (1098) அந்த மாணவி புகார் தெரிவித்துள்ளார்.
    இந்தப் புகாரின் பேரில், ரவீந்திரனின் மருத்துவமனையில்  கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் புதன்கிழமை விசாரணை நடத்தினர். இதில், ரவீந்திரன் மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போஸ்கோ) ரவீந்திரனைக் கைது செய்தனர். பின்னர், அவரை மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai