Enable Javscript for better performance
பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட   108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    கோவை மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தனியார் நிர்வாகம் சார்பில் 6 மாதத்துக்கு ஒரு முறை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். 
    இதில்,  முதலுதவி சிகிச்சை,  விபத்தில் காயமடைந்தவரை எவ்வாறு மீட்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.   நிகழாண்டுக்கான பயிற்சி கோவை  தாமஸ் கிளப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.  இந்தப் பயிற்சியின் இடைவெளியில் தனியார் நிர்வாகம் சார்பில் அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள உணவகத்தில் இருந்து மதிய உணவு வரவழைக்கப்பட்டது.   இந்த உணவை 4 பெண்கள் உள்பட 7 பேர் முதலில் உட்கொண்டனர். அப்போது அந்த உணவில் பல்லி இருந்தது தெரியவந்தது. இதனால் 7 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.  இதையடுத்து,  சக தொழிலாளர்கள் 7 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த உணவை உட்கொண்ட 4 பெண்களில் ஒருவர் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai