Enable Javscript for better performance
மருதமலையில் மாணவர்கள் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    கோவையை அடுத்த  மருதமலையை தூய்மைப் படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.  
    வன உயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, கல்லூரி மாணவர்கள், வனத் துறை ஆகியோர் இணைந்து மருதமலையில் மக்காத குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
    இதில்,  பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் பங்கேற்று அடிவாரம் மற்றும் மலைப் பாதைகளில் இருந்த மக்காத குப்பைகளை அகற்றினர். இந்தப் பணியானது வியாழக்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரையில் நடைபெற்றது.
    இதில்,  வனம் மற்றும் வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் 40 மூட்டைகளிலும்,  யானைகளின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 48 பாட்டில்களும் அகற்றப்பட்டன.  
    மேலும், வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் கொண்டு செல்வதை பொது மக்கள்  தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.  
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai