Enable Javscript for better performance
மருந்துக் கடை  உரிமையாளர் கடத்தல்: 7 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் கடன் பிரச்னை காரணமாக மருந்துக்கடை உரிமையாளரை காரில் கடத்திச் சென்றது தொடர்பாக 7 பேர் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
     கோவை,  ஆர்.எஸ்.புரத்தில் மருந்துக்கடை நடத்தி வருபவர் தன்ராஜ் (40). இவர் தொழில் விஷயமாக கோவையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரிடம் ரூ. 22 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனை 10 நாள்களில் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்திருந்தாராம்.  ஆனால் குறிப்பிட்ட நாளில் தன்ராஜ் பணத்தை செலுத்தவில்லை. மேலும்,  கடனைச் செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் தன்ராஜ் வீட்டுக்கு புதன்கிழமை இரவு  வந்துள்ளனர்.பின்னர் அவரை வெளியே வரவழைத்து தயாராக நிறுத்தியிருந்த காரில் அழைத்துச் சென்றனர். 
    இதையடுத்து,  அதிகாலை 3 மணி அளவில் அவரை வீட்டுக்கு வெளியே கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டுச் சென்றனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai