Enable Javscript for better performance
வார்டு மறுசீரமைப்பில் குளறுபடி: காரமடை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    வார்டு மறுசீரமைப்பில் குளறுபடி: காரமடை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 09th February 2018 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை பேரூராட்சியில் வார்டு மறுசீரமைப்பில் குளறுபடி இருப்பதாகக் கூறி திமுக மற்றும் அதன் ஆதரவுக் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
    காரமடை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அனைத்து வார்டுகளின் எல்லைகளும் மறுவரையரை செய்யப்பட்டு, அதன் இறுதி அறிக்கை இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
    இந்நிலையில், அனைத்து வார்டுகளின் எல்லை மறுசீரமைப்பிலும் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதிகாரிகள் பொது மக்களை கலந்து ஆலோசிக்காமலும், ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக, தன்னிச்சையாகவும் செயல்பட்டுள்ளதாகக் கூறி, திமுக நகரச் செயலர் வெங்கடேஷ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஆதரவுக் கட்சிகளின் நிர்வாகிகள், பொது மக்கள் காரமடை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    தொடர்ந்து, பேரூராட்சியின் கோடதாசனூர், டிஜி புதூர், சத்யா நகர், தேவி நகர், எத்தப்பன் நகர் ஆகிய பகுதிகளைக் கொண்ட 18-ஆவது வார்டை முற்றிலும் மாற்றி, வெவ்வேறு வார்டுகளுடன் இணைத்துள்ளதாகப் புகார் தெரிவித்தனர். 
    மேலும், அதை முன்னர் இருந்ததைப் போலவே மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
    சாலை மறியல்:
    பின்னர், கோரிக்கை குறித்த மனுவை பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகநாத் சிங்கிடம் அவர்கள் வழங்கினர்.  
    தொடர்ந்து, அதுகுறித்து மாவட்டப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, திமுக நகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அனைவரும் மேட்டுப்பாளையம் சாலை, ரயில் நிலையம் பிரிவு அருகே 5 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தினேஷ், கோரிக்கை குறித்து உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும் என உறுதி கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai